Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “தொழில் போட்டிகள் விலகிச்செல்லும்”… எதிர்பார்த்த பணம் வந்து சேரும்…!!

அன்பால் அனைவரையும் கவரக்கூடிய மேஷ ராசி அன்பர்களே…!! இன்று செயல்களில் நேர்த்தி உருவாகும். உங்களுடைய உழைப்பிற்கான பலன் இன்று அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் விலகிச்செல்லும். ஆதாய பண வரவில் சேமிப்பு கூடும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இன்று எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவர்களை முன்னிறுத்தி தான் தப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். உங்களுடைய சாதுர்யமான பேச்சு மூலம் காரிய வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறக்கூடும். இருந்தாலும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப்பாருங்கள். நினைவில் வைத்துக் கொள்ள உதவும். அதுபோலவே நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்வதாக இருந்தால் இன்று பச்சை நிற ஆடையை  அணிந்து செல்லுங்கள். இல்லையேல் கைக்குட்டையை  எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகளும் வந்து சேரும். அதே போல  காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |