மேஷம் ராசி அன்பர்களே..!! உங்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவரை இன்று சந்திக்க நேரிடும். பெருந்தன்மையுடன் அவரிடம் விலகிச் செல்லுங்கள். ஓரளவு நிலைமை இன்று சீராக தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி ஓரளவு நிறைவேறும். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள். இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
காரியத்தில் இருந்த தடங்கல்கள் விலகி செல்லும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பாடத்தில் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது. விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்படியாவது செய்து விடுவீர்கள்.
இன்று மனம் ஓரளவு அமைதியாக காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டும் இல்லை இன்று காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்