Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “தாயின் ஆரோக்கியத்தில் கவனம்”… வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் ஆரோக்கியத்தில் நீங்கள் தனி கவனம்  செலுத்த வேண்டும். தடைபடும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என்று முன்னேற முயலுங்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் தான். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்துசேரும்.

சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். கலை துறையை சார்ந்தவர்களுக்கு தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். சின்ன சின்ன வாக்குவாதங்கள் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு எந்தவித தடையும் இருக்காது. இருந்தாலும் ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். சக மாணவரிடம் பழகும் போது நிதானமாக பழகுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை நீங்கள் தயிர் சாதத்தை அந்த தானமாக வழங்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |