மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக உழைப்பின் காரணமாக தூக்கம் குறைவதால் உடல் நலம் சீராக இருக்காது. அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாளாகவும் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இன்று தடைபட்ட காரியங்கள் ஓரளவு தடை நீங்கிச் செல்லும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் காலதாமதமாகத்தான் வந்து சேரும். ஆன்மீகத்தில் எண்ணம் அதிகரிக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
இன்று தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். அது மட்டுமில்லாமல் தொழில் வியாபாரம் இழுபறியான சூழ்நிலையில் இருக்கும். உங்களுடைய வாக்கு வாதத்தை மட்டும் கட்டுப்படுத்தி விடுங்கள் அது போதும். புதியதாக ஏதும் முயற்சிகள் இன்று எடுக்க வேண்டாம். கூடுமான வரை பொறுமையாக இருங்கள். புதிய வாடிக்கையாளர்கள் தொழிலில் அறிமுகமாவார்கள். கூடுமானவரை அவரிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். இன்று அரசாங்க ரீதியில் இருந்து வந்த சிக்கல்கள் ஓரளவு சரியாகும்.
தடைபட்ட ஆர்டர்கள் கையில் வந்து சேரும். ஆனால் தன வரவுக்கு மட்டும் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். இதை கருத்தில் கொண்டு இன்றைய நாளை அதற்கு ஏற்றார்போல் செயல்படுத்துங்கள். இன்று உங்களுக்கு சிவப்பு நிறம் அதிர்ஷ்ட நிறமாக உள்ளது. சிவப்பு நிறத்தை பயன்படுத்தி இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்