Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “திருமண முயற்சி கைகூடும்”.. உண்மையானவர்களை கண்டறிவீர்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்மறையான சூழல்களில் கவனத்தை தவிர்க்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீரான முன்னேற்றத்தை கொடுக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். இன்று திருமண முயற்சி கைகூடும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை இன்று வெளிப்படும். புதுமை படைக்கும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று வாகனத்தில் செல்லும் பொழுதும் பயணங்கள் செல்லும் பொழுதும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். உடல் நிலையைப் பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று வெளிநாட்டு பயணங்கள் கிடைக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். கூடுமானவரை பயணங்களின் போது ரொம்ப கவனமாக இருங்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கடினப்பட்டு தான் உழைக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று காலை சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |