மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். செல்லும் இடங்களில் சிந்தனை வளர்த்தால் சிறப்பு அடைவீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்கநிலை மாறும். இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இன்று இருக்கும்.
மற்றவர்கள் பிரச்சனை தீர்வதற்கு கடுமையாக நீங்கள் பாடுபடுவீர்கள். காரியத்தடை தாமதம் போன்றவை கொஞ்சம் இன்று இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்து கொடுப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். ஆகையால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இருந்தாலும் வாகனத்தில் செல்லும்போதும் கொடுக்கல் வாங்கல் விஷயங்களிலும் இன்று கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் கொஞ்சம் தடை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள்.
நிதானமாக செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாளாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்