Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “செயல்களில் தற்காப்பு வேண்டும்”.. பஞ்சாயத்துக்கள் சொல்ல வேண்டாம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் தற்காப்பு வேண்டும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகின்ற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். இன்று அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

இன்று குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இன்று கணவன் மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம் அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் முயற்சி செய்து பாடங்களை படிப்பது நல்லது.

கூடுமானவரை பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |