Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “மன தைரியம் அதிகரிக்கும்”.. மரியாதை கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் வளரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு வந்து சேரும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும். இன்று மன தைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாகவே நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும் கௌரவமும் கூடும்.

எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று மற்றவர்கள் செயல்களால் மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்துவந்த பிரச்சினை முடிவுக்கு வரக்கூடும். கடன் பிரச்சினைகள் அனைத்துமே இன்று கட்டுக்குள் இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் நன்கு பாடங்களை கவனித்து படிப்பது மிகவும் நல்லது.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |