மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பிரமுகர்களால் முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மனக்குழப்பம் விலகிச்செல்லும். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடந்து முடியும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகவே இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். மற்றவருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.
அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் பிடிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
கல்வியிலிருந்த தடை விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ போக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்