Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “ஆபரணங்கள் வாங்கும் யோகம்”… தெய்வீக சிந்தனை அதிகமாகும்…!!!

மேஷ ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் இன்று மாறுவார்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். ஆபரணங்கள் வாங்க கூடிய யோகங்களும் உண்டாகும். கட்டிடம் கட்டும் பணி தொடரும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவரின் ஆதரவால் வெற்றிகளும் கிடைக்கும்.

இன்று மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். தொழில் வியாபாரம் மிகவும் நேர்த்தியாக நடக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களை நீங்கள் இன்று மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுபோலவே இன்று ஆன்மீக எண்ணம் உங்களுக்கு மேலோங்கும். அதாவது தெய்வீக சிந்தனை அதிகமாகவே இருக்கும்.

இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும், பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்டமான எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |