மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று எதிர்பார்த்த அனைத்து விஷயங்களுமே சிறப்பாக நடக்கும். அதாவது யோகமான நாளாக இன்று அமையும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கடன் சுமை குறையும். அந்நிய தேசம் பயணம் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும்.
இன்று எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். முயற்சி வெற்றியை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது மட்டும் நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி, செல்வ செழிப்பு ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.