Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர்”…..வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்….!!!!

மேஷம் ராசி அன்பர்களே…!!!  இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்லக் கூடும். புதிய திட்டங்களின் சிறப்பான வடிவமைப்பினால் தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணக் கடனில் ஒரு பகுதியை இன்று செலுத்த கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுக்க கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்பொழுதுமே கவனமாக நடந்து கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழிலில் லாபம் கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக பூசல்கள் இருக்கும். கூடுமானவரை கொஞ்சம் வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டினை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |