அனைவரையும் கலகலப்பாக வைத்திருக்கக்கூடிய மேஷராசி அன்பர்களே..!!இன்று தீவிர தெய்வ பக்தியால் மன நிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாளும் குருவருளாளும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபாரம் வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். எதிர்பார்த்த நிதியுதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்களை காண்பார்கள். இன்று புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்க கூடும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.
உங்களுடைய திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாகவே இன்று நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிற ஆடையோ அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் வெற்றிகரமாக காரியமாக அமையும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்