மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். தொலைதூர பயணங்களால் பலன் கிடைக்கும். மருத்துவ செலவுகள் இன்று இருக்கும், ஆகையால் உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்று யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் பேசுவது நல்லது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுங்கள்.
கடின முயற்சியின் பேரிலேயே காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். கலை துறையை சேர்ந்தவர்களுக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகளும் கிடைக்கும். தேவையான பண உதவி இன்று கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கூடுமானவரை இன்று வாக்குவாதங்கள் மட்டும் வேண்டாம்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த சிந்தனை இன்று மேலோங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்