மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதையும் யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். இடம் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப சுமை கூடுதலாகத்தான் இருக்கும். விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வியாபார விருத்திக்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று வழக்குகளில் சாதகமான பலன்கள் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தொழில் வியாபாரம் நல்ல சிறப்பாக இருக்கும்.
மற்றவர்களால் ஏற்பட்ட பழிச்சொல் நீங்கும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் மாலை நேரத்தில் மன குழப்பம் அடைய கூடிய சூழல் இருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். மாணவச் செல்வங்களுக்கு இன்று கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடந்து முடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்