மேஷம் ராசி அன்பர்களே..!! சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். புதிய முயற்சிகளை பின்னொரு அனுகூலநாளில் துவங்கலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். இன்று சுய நம்பிக்கை ஏற்படும்.
எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புக்கள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் இன்று கிடைக்கக்கூடும். உங்களுடைய செயல் திறனும் அதிகரிக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்