Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “சிலர் குறை கூறி பேசுவார்கள்”.. நீங்கள் விலகி செல்வீர்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல செயலை சிலர் குறை கூறி பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நீங்கள் விலகி செல்வீர்கள். தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். பிறர் பார்வையில் தெரியும் படி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். இன்று வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். பணி நிமித்தமாக பிரயாணம் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கணவன்  மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள், கவனமாக இருங்கள். இன்று வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |