மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும் நாளாக இருக்கும். இருப்பினும் செலவு கொஞ்சம் கூடும். தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும்.
பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் உங்களுடைய திறமை வெளிப்படும். இன்று பணவரவு கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்