மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். தாராள அளவில் பணவரவு இருக்கும். மாமன் மைத்துனருக்கு உதவிகளைச் செய்வீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். உறவினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் சிறப்பாக தான் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்