மேஷ ராசி அன்பர்களே..!! இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும் சோர்வும் கொஞ்சம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் பொழுதும் யோசித்து செயல்படுவது நல்லது.வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் பார்த்துக்கொள்ளுங்கள். செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். பாடங்களை கவனமாக படிப்பது நல்லது. இன்று முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்