எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மேஷராசி அன்பர்களே…!! இன்று நேர்மையான குணம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். திறமை வளர்ந்து பல மடங்கு நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடையக் கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் இன்று கலந்து கொள்வீர்கள். இன்று மனம் வருந்தும் படியான சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். அதிலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மை கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும்.
மனதில் மட்டும் வீண் மனக்கவலை வந்து செல்லும். பொறுமையாக இருங்கள். கவனமாகவும் இருங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியதாக இருக்கும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொண்டால் அனைத்தும் சரியாகும். சக மாணவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் போதோ சிவப்பு நிற ஆடையோ அல்லது சிவப்பு நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோலவே அதிகாலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்