மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.
பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இன்று இருக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற் கல்விக்கான முயற்சியிலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்