Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் இராசிக்கு… “பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்”…. மனத்துணிவு இன்று அதிகரிக்கும்..!!

அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தூரதேச பயணங்களால் ஏற்பட்ட தொல்லை விலகிச்செல்லும். வெளிவட்டார பழக்கவழக்கங்கள் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுருங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு இன்று அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

இன்று மனம் அமைதியாகவே காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில்  முன்னேற்றம் அடைய கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பாடத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |