மேஷம் ராசி அன்பர்களே.. !!இன்று உங்களுடைய மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும் .பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் .உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவிகளை செய்வார்கள். இன்று புதுமை படைக்கும் நாளாகத்தான் இருக்கும் .
இன்று துணிச்சலாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள் வாகனத்தில் செல்லும்போதும் பயணங்களின் போதும் ரொம்ப கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் ஏற்படும் கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்த முடிப்பீர்கள் இன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். அது போலவே இன்றும் பால்ய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்பும் இருக்கும் .
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்குஅதிஸ்ட்டட்த்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும் .
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
இன்று உங்களுக்கானஅதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5
இன்று உங்களுக்கானஅதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்