Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும்”… கவனம் தேவை…!!!

மேஷ ராசி அன்பர்களே..!!  இன்று உங்கள் மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளை புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறப்பாக இருக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இன்று முயற்சிகள் அனைத்து விதத்திலும் சாதகமான பலனையே கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

கலைத்துறையினருக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், இன்று ஆலயம் சென்று வருவீர்கள். ஆன்மீகத்திற்காக சிறு தொகையையும் செலவிடுவீர்கள். இன்று ஆன்மீக எண்ணங்கள் உங்களுக்கு மேலோங்கும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |