Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் இராசிக்கு… “குடும்பத்தால் மன வருத்தம் ஏற்படும்”… கவனத்துடன் ஈடுபடுவது நன்மை..!!

அனைவரையும் கவரக்கூடிய மேஷம் ராசி அன்பர்களே..!! தேவையற்ற கோபத்தால் இன்று குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். மனைவியின் கழகத்தால் உறவுக்குள் குழப்பங்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும். இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களிடம் ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். கணவன்- மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படும். கவனமாக பேசுங்கள் அது போதும்.

பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்லுங்கள். எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும். மனம் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதே போலவே இன்று காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரத்தை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |