மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் எவரிடமும் எந்த ரகசியத்தையும் பற்றியும் சொல்ல வேண்டாம். தொழிலில் உள்ள ரகசியத்தை பாதுகாப்பது மிகவும் சிறப்பு. இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகத் தான் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தொழில் வளம் மேலோங்கும் நாளாக இருக்கும். எண்ணங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் கூடும். சொன்ன சொல் நிறைவேற்றுவீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் கெட்டிக்காரராக செயல்படுவீர்கள். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மனை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். நீங்கள் செய்கின்ற விஷயங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்