Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…தொல்லைகள் ஏற்படும்…நிதானம் தேவை….!

மேஷ ராசி அன்பர்களே …! இன்று மனம்போன போக்கில் சென்று மகிழ்ச்சியை குறைத்துக் கொள்ளும் நாளாக இருக்கும். நண்பர்களால் தொல்லைகள் ஏற்படலாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது தான் ரொம்ப நல்லது. பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளருடன் வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம்.

பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். இன்று இறை வழிபாட்டுடன் பணிகளைத் தொடங்குங்கள் காரியங்கள் ஓரளவு சிறப்பாகவே நடந்து முடியும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். புதிதாக ஏதும் கடன்கள் வாங்க வேண்டாம். கணவன் மனைவி இருவரும் பேசும் பொழுது கொஞ்சம் பொறுமையாக நிதானமாக பேசுங்கள். மற்றவர் கூறுவதை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் பதில் கொடுங்கள்.

அது போலவே காதலும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும், பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

 

Categories

Tech |