மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாகவே இருக்கும். பணிநிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று தாய்வழி ஆதரவு திருப்தியை கொடுக்கும். அதேபோல தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இன்று அதிகமான லாபம் கிடைக்கும்.
தொழில் துறையில் உள்ளவர்கள் இன்று ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். செலவுகள் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். யாருக்கும் இன்று நீங்கள் கடன்கள் கொடுக்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்