Categories
உலக செய்திகள்

இவ்ளோ குழந்தைகளா கொல்லப்பட்டிருக்காங்க…? மொத்தம் 21 மோதல்கள்…. அறிக்கையை சமர்ப்பித்த ஐ.நாவின் தலைவர்….!!

குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறலில் சுமார் 19,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் தலைவர் வெளியிட்ட ஆண்டு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐ.நாவின் தலைவரான அன்டோனியா என்பவர் ஆயுத மோதல் மற்றும் குழந்தைகள் குறித்த பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் குழந்தைகளை கொல்வது, கடத்தி செல்வது போன்ற குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்களின் சேகரிப்பு தொகுப்பு அடங்கியுள்ளது.

இந்த குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் அத்துமீறலுக்கான சேகரிப்பின் படி கடந்தாண்டு மொத்தமாக நடந்த 21 மோதல்களில் சுமார் 19,379 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 2,674 குழந்தைகள் கொல்லப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுமார் 5,748 குழந்தைகள் பலவிதமான மோதல்களில் காயமடைந்துள்ளார்கள். இதோடு மட்டுமல்லாமல் சுமார் 8,521 குழந்தைகள் படையினர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |