கொரோனா தொற்று உறுதிப்படுத்தபடாவிட்டாலும் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் அந்த அறிகுறிகளுக்கானா சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா தொற்றின் அறிகுறியான காய்ச்சல், மூச்சுத் திணறல், சுவை உணர்வு , தொண்டைப்புண், சளி, இருமல் ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பரிசோதனையில் வெளிவரும் முடிவு நெகட்டிவ் என வந்தாலும் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இத்தகைய காரணத்தால் பரிசோதனையின் முடிவானது நெகட்டிவாக இருந்தால் நோயாளிக்கு காணப்படும்.
அறிகுறிகளுக்கானா சிகிச்சையானது அளிக்க வேண்டும் என்று நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதை அடுத்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உள்ள நுரையீரல் பிரிவில் பணியாற்றும் மருத்துவ நிபுணர் நீரஜ் குப்தா பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.அதில் “மருத்துவ அறிகுறி மற்றும் சி.டி ஸ்கேன்” ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சிகிச்சை அளிப்பது சற்று சந்தேகத்தை மருத்துவர்களிடையே ஏற்படுத்தியுள்ளதுஎன்று கூறியுள்ளார்.
ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவு 70 சதவீதமும், ஆன்டிஜென் சோதனை முடிவு 40 சதவீதமும், ஆன்டிபாடி சோதனை 90 சதவீதமும் நம்பகத்தன்மை கொண்டுள்ளதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சோதனை மாதிரிகள் சரியாக சேகரிக்க படாத காரணத்தால் பரிசோதனையில் வைரஸ் தொற்றானது குறைவாக இருந்தால் வெளிவரும் முடிவு நெகட்டிவாக வருவதற்கு பல வாய்ப்புகள் உள்ளது. இதனைத் தொடர்ந்து சோதனை முடிவுகளை நம்பாமல் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டுமென தனது கருத்தை மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.