Categories
உலக செய்திகள்

மீண்டும் தலை தூக்குகிறதா கொரோனா?…முன்எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய சீனா!

வூஹான் நகரிலுள்ள சுமார் 1.1 கோடி மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை நடத்த சீனா அரசு  திட்டமிட்டுள்ளது.

 

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வைரஸ் தொற்றை கையாளுவதில் சீனா மிக மோசமாகச் செயல்பட்டதாக பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு பிறகு எடுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகளால்  வைரஸ் தொற்று தற்போது சீனாவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “சீனாவில் சனிக்கிழமை மட்டும் ஐந்து பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என்றும், 3 பேர் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்” என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

கடந்த சில நாள்களாக ஜிலின் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து வருவதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை அறிகுறிகள் ஏதும் தென்படாமல் 12 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டன. அதில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளன. கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று தென்படாமல் இருந்த வூஹான் நகரிலும் சில நாள்களாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வூஹான் நகரில் வைரஸ் தொற்று மீண்டும் பரவுவதாலும் அறிகுறிகள் இன்றி  கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதாலும் வூஹான் நகரில் உ ள்ள 1.1 கோடி மக்களுக்கும் வைரஸ் தொற்றைக் கண்டறியும் சோதனையை மேற்கொள்வதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

மே முதல் பாதியில் சீனாவில் சமூக பரவல் காரணமாக 39 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது என தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் மி ஃபெங் கூறியுள்ளார். ஏப்ரல் இறுதியுடன் ஒப்பிடுகையில் 46 மற்றும் 62 விழுக்காடு குறைவு என்றும் தெரிவித்துள்ளார் .

இதுவரை சீனாவில் 82,947 போருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 86 பேர் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். 4,634 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |