Categories
சினிமா தமிழ் சினிமா

அறிமுக இயக்குனருக்கு கமல்ஹாசன் பாராட்டு ….! மகிழ்ச்சியில் படக்குழுவினர் ….!!!

அறிமுக இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகவுள்ள  ‘அன்பறிவு’ படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன்  பாராட்டு தெரிவித்துள்ளார் .

தமிழ் திரைப்பட உலகின் பாரம்பரியம் மிகுந்த படம் நிறுவனங்களில் ஒன்று சத்யஜோதி பிலிம்ஸ் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில்,ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள ‘அன்பறிவு’ படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது .இந்நிலையில் இதைப் பார்த்து ரசித்த நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் அஸ்வின் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார் .இதில் நடிகர் கமல்ஹாசன்  நடிப்பில் சர்வதேச அளவில் பெரும் புகழ்பெற்ற ‘மூன்றாம் பிறை ‘படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் நிறுவனரும், தயாரிப்பாளருமான டி.ஜி. தியாகராஜன் கூறுகையில்,” அன்பறிவு படமும் முற்றிலும் இளைஞர் பட்டாளத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட படம் . இளைஞர்கள் மத்தியில் ஆதரவை பெற்ற ஹிப்ஹாப் ஆதி இதில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் .வருங்காலத்தில் இவர் முன்னணி நடிகராக  ஜொலிப்பார். மேலும் மூத்த நடிகர் நெப்போலியன் படத்துக்கு பெரும் பலம். கதாநாயகி காஷ்மீரா உட்பட நடிகர் -நடிகைகள் பலரின் ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் சொல்லில் அடங்காதது. இப்படத்தைப் பார்த்து கமல்ஹாசன் பாராட்டு மற்ற கலைஞர்களை ஊக்குவிக்கும். மொத்தத்தில் இந்தப் படம் எங்கள் நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |