Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரிவாள் பட்டறை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். இதனால் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வருகை தந்துள்ளார். அப்போது தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு கொலை சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்படும் அரிவாள் தயாரிப்பை கண்காணிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அரிவாள் பட்டறைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் பத்தமடை பகுதியில் வசிக்கும் சுடலை என்பவர் அரிவாள் பட்டறையில் இருந்து கூலி படையினருக்கு அரிவாள்கள் தயாரித்து வழங்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பத்தமடை பகுதியில் உள்ள பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுடலை கூலி படையினருக்கு அரிவாள் தயாரித்து வழங்குவதாக காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அரிவாள் பட்டறை உரிமையாளர்  சுடலையை கைது செய்ததோடு அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |