Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கச்சேரி தளவாய்புரம் பகுதியில் சுடலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் உள்ளார். கடந்த 19.9.2021 அன்று கலைச்செல்வன் தன்னுடைய பிறந்தநாளை தனது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சீட்டில் கேக் வைத்து அரிவாளால் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனை செல்போனில் வீடியோவாக எடுத்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் மணியாச்சி காவல்துறை கண்காணிப்பாளருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில் ஒட்டபிடாரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கலைச்செல்வனை கைது செய்ததோடு அவரிடமிருந்த 5 அரிவாள் மற்றும் அதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் இதுகுறித்து கூறியதாவது, இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Categories

Tech |