வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை அரிவாளுடன் மிரட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்லவன் கோட்டை பகுதியில் சீதபற்பநல்லூர் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காவல்துறையினர் மோட்டார் சைக்கிளுக்குரிய உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்களை அனுப்ப முடியும் என கண்டிப்பாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளுக்குரிய எந்த ஆவணங்களையும் காவல்துறையினரிடம் ஒப்படைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்த அரிவாளை எடுத்து திடீரென காவல்துறையினரை மிரட்டி தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் சுதாரித்துக்கொண்ட அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் வல்லவன் கோட்டை பகுதியில் வசிக்கும் சிவசுரேஷ், அபினேஷ் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காவலர் நாகேஸ்வரராவ் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சிவசுரேஷ், அபினேஷ் ஆகிய 2 பேர் மீதும் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அரிவாளைக் காட்டி மிரட்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.