வெளிநாடுகளிலிருந்து வந்த 247 பேரில் 32 நபர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக மராட்டிய மாநிலங்களில் இருந்து 67 பேர் அரியலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்கையில் 8 பேருக்கு சாதாரண காய்ச்சலும், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்து உள்ளது. இருப்பினும்,
சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணி நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்ற 247 பேர் மீண்டும் அரியலூர் திரும்பியுள்ளனர். அவர்களில் 32 பேருக்கு அறிகுறி இருப்பதால் அவர்களை 28 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 22 பேரும் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களது வீடுகளுக்கு முன் நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.