Categories
அரியலூர் மாநில செய்திகள்

கொரோனா நுழையாத அரியலூர் மாவட்டம் – தடுப்பு நடவடிக்கைகளில் அதிரடி காட்டிய மாவட்ட அட்சியர்!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என்ற நல்ல தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக உள்ளது. அரியலூரில் 144 தடை உத்தரவை மீறி வெளியே திரிந்ததாக 2,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 93 மளிகை கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் ரத்னா, புதிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து அதிரடி காட்டியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 22,760 குடும்பங்களுக்கு தனிப்பட்ட அடையாள அட்டையை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து வீடுகளுக்கும் பச்சை, நீலம் மற்றும் மங்கள் நிற அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவர் இந்த அடையாள அட்டையை கொண்டு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம். பச்சை நிற அடையாள அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமை, நீல நிற செவ்வாய் மற்றும் வெள்ளி, மஞ்சள் நிற அடையாள அட்டை புதன் மற்றும் சனி என இந்த குறிப்பிட்ட நாட்களில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ரத்னா, அரியலூர் மாவட்டத்தி 201 பஞ்சாயத்து உள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இந்த நடைமுறையை காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் வருவது வாடிக்கையாக இருந்தது. இதனை கட்டுப்படுத்த இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் மருந்து, மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே வரும் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |