உலகின் அதிகமான பழுதடைந்த விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தபட்டுள்ளது.
உலகின் அதிகமான பழுதடைந்த விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு விண்வெளி பராமரிப்பு மற்றும் பழுதடைந்த விமானங்களை மீண்டும் உருவாக்கும் குழு ஒன்று இயங்கி வருகிறது. இங்குதான் உலகின் அதிகமான ராணுவ விமான வகைகளும், பழைய விமானங்களின் உதிரிபாகங்களும் பிரித்தெடுக்கப்பட்டு மீண்டும் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 800 பணியாளர்கள் இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இங்கு பல்வேறு வகையான இராணுவ பணிகளில் ஈடுபட்ட விமானங்களும், நாசாவின் விமானங்களும் உள்ளன. F-16, C-5s, B-52s, A-4 போன்ற விமான வகைகள் இங்கு அதிக அளவில் உள்ளன.
இதுகுறித்து அந்த குழுவின் கமாண்டர் ஜெனிபர் பர்னாட் கூறும்போது, ஒரு காரை மறு உருவாக்கம் செய்வதுபோல விமானங்களையும் செய்யமுடியும் என தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யும் விமானங்களில் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். 1946ஆம் ஆண்டு விமான பராமரிப்பு மற்றும் மீண்டும் உருவாக்கும் குழு தொடங்கப்பட்டுடுள்ளது. அந்த சமயம் இரண்டாம் உலகபோருக்கு பயன்படுத்தப்பட்ட விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது . அப்போதுதான் இந்த குழு அரிசோனா பாலைவனத்தின் ஒரு பகுதியை சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கியது. தற்போது இங்கு 80 வகையான போர் விமானங்கள் உள்ளது.