Categories
மாநில செய்திகள்

காவி துண்டு…. ருத்ராட்சம்….. தீபாராதனை…. சர்சையை கிளப்பிய அர்ஜுன் சம்பத் …!!

பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு  காவி துண்டு அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் 2005 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் மூன்றடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை மீது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கருப்பு கலர் சாயம் , சாணி பூசி அவமானப்படுத்தினர். பெரும்  ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் , தமிழ் தேசிய அமைப்புகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமிழ்ப்பல்கலைக்கழக காவலநிலையத்தில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  4  தனி படைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதிக்கு வந்தவர்கள் யார் என்று அப்பகுதியில் உள்ள CCTV கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தஞ்சை பெரியகோவிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அனுவித்து , கழுத்தில் ருத்ராட்சம்  மாலை போட்டு தீபாராதனை காட்டினார். அர்ஜுன் சம்பத்_தின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |