சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘ பினராய் விஜயன் அரசு கடந்த ஆண்டு பீடி, சிகரெட், மது குடிக்கும் பெண்களை சபரிமலைக்குள் அனுமதித்தார். இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும், சபரிமலையை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றவேண்டும் என்பதற்காகவே பினராயி விஜயன் இவ்வாறு செய்வதாகவும்’ அர்ஜுன் சம்பத் வேதனை தெரிவித்தார்.மேலும், ‘ ஐயப்பன் கோயிலின் புனிதத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கிறது’ என்று அவர் கூறினார்.