Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஆயுதப்படை காவலர் வெட்டி கொலை – செங்கல்பட்டில் கொடூரம் ..!!

செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரத்தில் பகுதிகளில் வசித்து வரும் இன்பரசு என்பவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலர் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவர் தொலைபேசிக்கு நண்பர்கள் அழைப்பதாக கூறி அழைத்துள்ளனர்.

இதனை அவர் வெளியே செல்ல இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது 2 இருசக்கர வாகனங்கள் வந்த மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். படுகொலை காரணமாக இன்பரசுவின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதப்படை காவலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |