Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை கண்டறிய புதிய யுக்தி…. இதுல கூட கண்டுபிடிக்கலாமா….? பயிற்சி எடுக்கும் ராணுவ நாய்கள்….!!

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நாய்களுக்கு சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதன் வீரியம் குறைந்ததால் இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸிற்காக தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு பி.சிஆர் முறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் இந்திய ராணுவத்தில் இருக்கும் நாய்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக சிப்பிப்பாறை, நாட்டு நாய்கள், லேபர்டாக் ஆகிய சில குறிப்பிட்ட வகை நாய்களுக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரிலிருந்து கொரோனா தொற்றை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. அதேசமயத்தில் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை மூலம் கொரோனா தொற்றை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது எட்டு நாய்களுக்கு கொரோனா தொற்றை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டு அதில் இரண்டு நாய்கள் சண்டிகரில் உள்ள காஷ்மீர் மற்றும் லடாக்யின் எல்லைப் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை சோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாய்களின் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் கொரோனா மாதிரிகள் அனைத்தும் மலட்டுத் தன்மை உடையவை. இதனால் நாய்கள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என பயிற்சியாளர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

Categories

Tech |