ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த ராணுவம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. எனினும், தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே கட்டுப்பாடுகளை செயல்படுத்த ராணுவத்தை அழைத்துள்ளனர். இனிமேல் ராணுவ பாதுகாப்பு படையினர் சுமார் 300 பேர் சிட்னியில் நிற்பார்கள்.
இது தொடர்பில், நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளதாவது, வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தென்மேற்கு சிட்னியில் கடும் விதிகள் நடைமுறையில் இருக்கிறது. அதே போன்று நகரத்தின் மேற்கு பகுதிகளிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தீவிரமாக தடுப்பூசியளிக்கப்பட்டு வருகிறது.