Categories
தேசிய செய்திகள்

ஒருவழியா பிரச்சனையை முடிச்சாச்சு… எல்லையிலிருந்து விலகும் இரு நாட்டு படைகள்…. திரும்பும் அமைதி சூழல்…!!

லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் விலகும் நடவடிக்கை தொடங்கியுள்ளதால் படிப்படியாக அப்பகுதியில் அமைதி நிலவும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள லடாக் எல்லையில் நீண்ட காலமாக பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்ததால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த மோதலால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஏராளமான வீரர்களை குளித்ததால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதோடு இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வதற்கும் எல்லைப் பகுதியில் சீனா இடையூறு செய்து வந்துள்ளது. இந்த காரணத்தால் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் ஏரி மற்றும் டெம்சோக் போன்ற பகுதிகளில் எப்போதும் பதற்றம் நிலவி வந்துள்ளது.

இதனால் இரு தரப்பினை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவ்வாறாக 9வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாத இறுதியில் நடைபெற்றுள்ளது. அவர்கள் எடுத்த முடிவின்படி லடாக் எல்லையில் உள்ள காங்கோ ஏரி பகுதியில் இந்தியா-சீனா படைகளையும் விளக்கும் நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதால் எல்லையில் மீண்டும் அமைதி திரும்பும் சூழலானது உருவாகியிருக்கிறது. இதுகுறித்து சீன பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ஏரியில் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் உள்ள இரு நாட்டு படையினரும் விலக ஆரம்பித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த பகுதிகளில் இருந்து திரும்பி செல்லும் வீரர்கள் எல்லையில் ஏற்கனவே இருந்த நிலைக்கு செல்வார்கள் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |