மதிமுக பொதுச்செயலாளர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது, 1967இல் ஆட்சி மாறியது. ஆட்சி மாறி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அண்ணா அவர்கள் முதலமைச்சரானார்கள். அப்பொழுது இரண்டு பிரச்சனைகள் தான் அந்த தேர்தலை தீர்மானித்தன… 1.) எங்கு பார்த்தாலும் வேட்டுச்சத்தம்… இந்திய ராணுவம். எல்லையில் இருக்க வேண்டிய இந்திய ராணுவம், தமிழ்நாட்டுக்குள்ளே நுழைந்து… நூற்றுக்கணக்கானவர்களை சுட்டு பொசிக்கியது. எண்ணற்ற பிணங்கள் ஆங்காங்கே விழுந்தன. எட்டு பேர் தீக்குளித்து மடிந்தார்கள்.
அந்த பிரச்சினை எரிமலையாக தமிழர்கள் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது அரசுக்கு எதிராக… அதைப்போல அரிசி கேட்டு வந்த அர்ஜுன் சுட்டுக் கொல்லப்பட்டார் கோவையிலே…. அரிசி ஒரு பிரச்சனையாகிட்டு… ஆக உணவு பிரச்சனையும், துப்பாக்கி குண்டு பிரச்சனையும் இரண்டும் தான் இந்த தேர்தலை தீர்மானித்த நேரத்தில்… அந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் 138 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பிற்கு வந்த போது…
யாரை அமைச்சராக்குவது என்கிற போது எந்தப் பிரச்சனை சிக்கலை உண்டாக்கும் என்று கருதினார்களோ…. யாராலும் தீர்வு காண முடியாது என்று கருதினார்களோ… அந்த அரிசி பிரச்சனையை தீர்ப்பதற்கு உணவு மந்திரி ஆக ”மதி” அவர்களை ஆக்கினார்கள். ”மதி” அவர்கள் அதை திறம்பட கையாண்டு, விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைப்பதற்கும்…
பொது மக்களுக்கும் குறைந்த விலையில் அரிசி கிடைப்பதற்கும் அவர் ஏற்பாடு செய்தார். இதனுடைய விளைவு 117 நாடுகள் கலந்து கொண்ட உலக உணவு மாநாட்டிற்கு இந்தியாவினுடைய மாற்றுப் பிரதிநிதியாக நம்முடைய ”மதி” அவர்களை தான், அனுப்பி வைத்தார்கள்… இது ரோமில் நடைபெற்றது. ரோமாபுரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு அவரும் போய் சேர்ந்தார். கடைசி காலத்திலே கொஞ்சம் மனம் உடைந்தாலும், அதிலிருந்து மாறிவிட்டது என்பதற்கு அடையாளமாக தான், கலைஞர் அவர்கள்…
அவரின் நினைவு நாளில் பேசுகின்ற போது சொன்னார்கள்…. நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பதற்கு காரணமே மதியும், நாஞ்சிலாரும் தான் என்னை அந்தப் பதிவியிலே இருப்பதற்கு காரணமாக இருந்தார்கள் என்று கலைஞர் அவர்கள் அன்று குறிப்பிட்டார்கள். எனவே மதி அவர்களின் புகழ் திராவிட இயக்கத்தில் எற்றைக்கும் நிலைத்திருக்கும். அவர் மாணவர் இயக்கத்தை உருவாக்கியதற்கு காரணம் ”மதி” அவர்கள் தான். லட்சியங்களையும், கொள்கைகளையும் தாங்கியவர் ஆக அவர் வாழ்ந்து…
அவர் வாழ வேண்டிய வயதிலையே மறைந்து மறைந்துவிட்டார் என்பது அந்த குடும்பத்தினருக்கு எவ்வளவு பெரிய சோகத்தை தந்திருக்கும் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். ஆகவே அண்ணன் ”மதி” அவர்களோடு நான் சென்று கூட்டம் பேசி இருக்கிறேன். மாணவர்களின் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்றைக்கு அவரைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த திரு ராஜன் அவர்களுக்கும், அருள்மொழி அவர்களுக்கும்,
அதுபோல உசேன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி வாழ்க மதி அவர்களுடைய புகழ் நீடு வாழ்க மதி அவர்களுடைய புகழ் நிலைத்து வாழ்க நிரந்தரமாக வாழ்க இன்னும் பரவாமல் இருக்கிற பகுதிகளுக்கு எல்லாம் மதியினுடைய புகழ் போய் சேரட்டும் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் என கூறி தனது உரையை முடித்தார்.