லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடந்த பேச்சவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.
லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது.
இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று, ராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த, சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று இந்திய ராணுவத்தின் 14வது படைப் பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சு இன்று காலை துவங்கியது.
லடாக்கில், இந்திய எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் லாடக் எல்லையில் பதற்றத்தை தணிக்க, படைகளை வாபஸ் பெற சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.