Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இராணுவ வீரர் செய்யுற வேலையா இது… ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தவர்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

முன்னாள் ராணுவ வீரர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு நள்ளிரவு நேரத்தில் வந்த நபர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்ததோடு, தான் கொண்டு வந்த ஆயுதத்தால் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் தொடுதிரையை மட்டும் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வங்கி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கியின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் திருச்சி மேலசிந்தாமணி புரம் பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் தனது தேவைக்காக ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றதும், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விட்டனர்.

Categories

Tech |