மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக வந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.