Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் இருந்த ராணுவ வீரர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுபோதையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜா கடை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கோவிந்தன் போதையில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த கோவிந்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |